Thursday, October 16, 2008

பொன்னியின் செல்வனில் எத்தனை பெண்கள் ?

எத்தனையோ கதாபாத்திரங்களை நாம் இதுவரை கண்டிருக்கலாம் நம் வாழ்க்கையில் நிஜத்திலும் சில நேரங்களில் கற்பனையிலும் ... பிரமிப்பைத் தரும் அவர்களைப் பற்றி செவி வழியாகக் கேள்விப்பட்டாலும் சரி ..இல்லை வாசிகக நேர்ந்தாலும் சரி "இவர்களைப் போல நாமும் இருந்திருக்கலாமே " என்ற ஒருவிதமான பாதிப்பை நம்முள் அவர்கள் கட்டாயம் ஏற்படுத்தியே தீருவார்கள் .கல்கியின் சில பாத்திரப் படைப்புகள் அப்படித்தான் .அதில் வரும் பெண்களில் குந்தவை மட்டுமே என்றும் குன்றா தனி புகழோடு விளங்குகிறாள் ;ஆயினும் ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தனது அன்பினாலும் ,தந்திரத்தினாலும் சாதித்துக் கொள்ள முடியும் என்பதற்கு நந்தினியும்,குந்தவையுமே சாட்சி .நந்தினியை நினைத்தால் என்ன பெண் இவள் என்று ஆதங்கமும் ...ஆத்திரமும் வந்தாலும் "ஐயோ பாவம் " என்று கூட ஒரு சின்ன இழை ஓடத்தான் செய்கிறது .பூங்கோதை ...வலிவு உள்ள பெண் தான் ஆனாலும் சரியான கோட்டிக்காரியோ என்று நகைக்கத் தோன்றுவதும் உண்மை .