Monday, August 18, 2008
வந்தியதேவனும் சோழர்களும்
வரலாற்று கதாபாத்திரங்கள் நாவல் வாஷிக்கும் பழக்கம் அல்லது வழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக கல்கியின் "பொன்னியின் செல்வனை " மறந்திருக்க முடியாது ...;எத்தனை ...எத்தனை கதாபத்திரங்கள் !கதையோடு ஒன்றி விடும்போது அந்த பெயர்கள் ...உச்சரிக்க கடினமாய் இருந்தாலும் கூட அதென்னவோஅண்டை வீட்டு மனிதர்கள் போல பதிந்து போன கதை மாந்தர்கள்வந்தியதேவனை மறக்க முடியுமா?நிஜமாகவே கல்கி சித்தரித்ததைப்போல அவன் அவ்வளவு துடுக்கான வாலிபனா ?யாருமற்ற ஒரு அனாதை ...ராஜா குலம் என்ற பழம்பெருமை கொஞ்சமிருந்தாலும் அவன் தன் துணிவு மிக்க செயல்களால் மட்டுமே மனதில் பதிகிறான் ...நாவலின் இறுதியில் அவன் மணிமேகலையின் இறப்பின் பின் தன் பழைய துடுக்குத் தனத்தையும் , விளையாட்டு பிள்ளை இமேஜ் எல்லாவற்றையும் துறப்பது போல கட்டி இருப்பது மனதில் ஒரு இனம் புரியா சோகத்தை ஏற்றி விடுகிறது ...வந்தியதேவனை எப்படி மறக்க முடியாதோ ?அதே போல அவனுடன் பல இடங்களில் இணைந்தே வரும்கதைமாந்தர்கள் சிலரை கொஞ்ச நேரமே வந்து போகும் பாத்திரங்கள் ஆனபோதும் சுவரஷ்யமானவர்களே !வீர வைஷ்ணவன் அடியார்க்கு நம்பி ,( அநிருத்தரின் ஒற்றர் படையினன் )ரவிதாசன் ( பாண்டிய ஆபத்து உதவிகள் .... வில்லன் தன் ஆனாலும் இவனொரு காமெடி வில்லன் )சோமன் சாம்பவான் (")இடும்பன் காரி (")கந்தமாறன் (நண்பனாயிருந்து பின்பு வந்தியதேவனின் எதிரி ஆனவன் )பார்த்திபேந்திரன் (பல்லவ இளவரசன் )பழுவேட்டரையர்கள் ( சின்ன பழுவேட்டரையர் ...பெரிய பழுவேட்டரையர் )ராஜராஜனை விட்டு விடலாம் எனென்றால் அவன் சக்ரவர்த்தி திருமகன் ...அவனை மறந்தால் நாம் சரித்திரப் பாடமே பயிலவில்லை என்று அர்த்தமாகிவிடும் ...அவனது அக்கா ... குந்தவை கூட அப்படித்தான் ...அவளும் சக்ரவர்த்தி திருமகள் ...மறக்க முடியுமா ... அவளது சௌந்த்ரயமான புத்திசாலித்தனத்தை !அப்புறம் கூடவே கொடும்பாளூர் வானதி ;இந்த பெண்ணின் வயிற்றில் பிறந்தவனா கங்கை கொண்ட ராஜேந்திரன் என்ற ஐயம் வரும்படி ஆரம்பத்தில் கல்கி ஏன் இவளை வெகு பூஞ்சை மனம் படைத்த வலுவற்ற பெண்ணாக காட்டினாரோ தெரியவில்லைஅப்புறம்நந்தினிபூங்குழலி ...இருவருமே நிஜக் கதாபாத்திரங்கள் இல்லை என நினைக்கிறேன்இவர்களைப் பற்றி பிறகு பேசலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment