Tuesday, August 19, 2008

சோழர்கள் கோயில்கள் எழுப்பியதன் பன்முகப் பயன்பாடு

இன்றென்னவோ கோயில்கள் நல்ல மொசைக் தரை அல்லது மார்பில் கற்கள் பாவிய தரையுடன் வெகு சுத்தமாகக் கட்டப்படுகின்றன ...இன்னும் சொல்லப் போனால் சின்ன சின்ன ஒற்றை அறைகளில் கூட ஒரு சாமி சிலை ... அது என்னவோ அம்மன் ... முருகன் ...பிள்ளையார் சிலை நாகர் சிலை ... எதை வேண்டுமானாலும் வைத்து முண்டி அடித்தவாறு தங்களது பக்திப் பெருக்கை தனித்துக் கொள்கிறார்கள் மக்கள் ;
பொன்னியின் செல்வனில் ஆதித்தச் சோழன் காவேரி தோன்றிய இடத்தில் இருந்து அது பாய்ந்து வரும் பாதை தோறும் நூற்றி எட்டு சிவ ஆலயங்களை எழுப்பினான் என்று வரலாற்றுச் செய்தி படிக்கக் கிடைத்தது .
இது மட்டும் அல்ல அன்றைய கோயில்கள் எதுவுமே அளவில் சின்னவை அல்ல எல்லாமே பல நூறு மக்கள் சேர்ந்து நின்று தரிசிக்கும் வண்ணம் விஸ்தீரணமாகவே கானகிடைகின்றன, மன்னர்கள் கோயில் கட்டியதன் நோக்கம் சுவாமி தரிசனமாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அன்று மக்கள் விவசாயத்தை பூரணமாக நம்பி இருந்ததால் ஆற்றங்கரைகளில்
இருப்பிடம் அமைத்து வாழ்ந்தனர் .அன்று மட்டும் அல்ல ...கிழக்கிந்திய கம்பெனி யினர் முதன் முதலாக தங்களது கிடங்குகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கியதும் நீர் சார்ந்த கடற்கரை ஓரமாக தான் ...
இப்படியாக மக்கள் தமது வாழ்கையின் ஆதரமாக நீர் வளத்தையே நம்பி இருந்தனர் வெள்ளையர் போக்குவரத்துக்கு கடலை நம்பினால் நம்மவர் விவசாயத்திற்கு ஆற்றை நம்பினார் ...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆதித்தியன் மட்டும் இல்லை பின்னால் வந்த மன்னர்கள் எல்லோருமே கோயில் எடுத்தான் காரணம் வெள்ளப் பெருக்கின் பொது மக்கள் தம் வீடுகளை இழந்தாலும் கோயில்களை அண்டி வெள்ளத்திலிருந்து சில நாட்கள் நிவாரணம் பெறலாம் என்பதே ஆகும் .
அது மட்டும் அன்றி கோயில்கள் படை எடுப்புகளின் பொது மருத்துவமனைகலாகவும் பயன்பட்டன
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் கோயில்களின் பன்முகப் பயன்பாட்டை ;
உங்களுக்கு இது குறித்து ஏதேனும் தெரிந்தால் நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்




No comments: