அன்றைக்கு இருந்த ராஜராஜன் இன்றைக்கு இல்லை
குந்தவை இப்போது இல்லை ...ராஜேந்திர சோழன் இல்லை .
அநிருத்த பிரம்ம ராயரும் இல்லை ...வேங்கைக் கொடி இன்றில்லை .
அன்று வாழ்ந்த எத்தனையோ பெரும் பணக்காரர்களும் ... அரசருக்கு
மிக நெருங்கிய பந்துக்களும் . அவரது ஏராளமான மனைவிகளும்
இப்போது இல்லவே இல்லை , ஏன் ராஜேந்திரனைத் தவிர ராஜராஜன்
பெற்றெடுத்த வேறு எவருமே நம் நினைவில் கூட உயிரோடு இல்லை ,
தஞ்சைப் பெரிய கோயிலை தரணிக்கு அளித்திட்ட ராஜராஜனையும்
கங்கை கொண்ட சோழபுரம் தந்தருளிய ராஜேந்திர சோழனையும் மன்னனின் வெற்றிக்கு
ஊக்கமளித்திட்ட அவனது ஆருயிர் தமக்கை குந்தவையையும் தவிர வேறு யார் தன்
நீடித்து நிற்க முடியும் மக்கள் மனங்களில் ?!!!
கோயில்கள் வெறும் கல் கட்டிடங்கள் அல்ல வாய் இருந்தால் அவை சொல்லும்
ஆயிரம் கதைகள் ,
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் நாணயம் போட்டு விட்டு அதை போவோர் வருவோரிடம் எல்லாம் பறை சாற்றும் உலகம் இது ... இதில் கோயில்களின் கல் தூண்களுக்கும் வாய் இருந்திருப்பின் பெருமை கேட்டு மாளாது ... ஒன்ற..இரண்டா அவற்றின் நற்பயன்கள் .
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment